

அபுஜா
நைஜீரியா மட்டுமல்லாது காமரூனிலும் இக்கொலைகள் நடந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நைஜீரிய ராணுவமோ போகோ ஹராம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறி வருகிறது. என்றாலும் தொடர்ச்சியாக பல தாக்குதல்களை அந்த இயக்கம் நடத்தியுள்ளது.
ஜூலையில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் மூவரை கடத்தியது 40 பேர்களை கொன்றது. ஏப்ரல் முதல் தற்கொலை படையினர் மூலம் 81 பேர் நைஜீரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் காமரூனில் 158 பேர்களை அந்த இயக்கம் கொன்றுள்ளது.
சுமார் ஒரு கோடி பேர் நைஜீரியா, காமரூன், நைஜர் மற்ரும் சாட் ஆகிய நாடுகளில் போகோ ஹராம் இயக்கத்தினால் உணவு கிடைக்காமல் அவதியுற்று வருவதாக ஐநா கூறுகிறது. கடந்த 8 வருடங்களில் சுமார் 20,000 பேர் உள்நாட்டு மோதலில் இறந்துள்ளனர்.