

லா பாஸ்,
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை முழுமையாக முடக்கியதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன.
இதனால் ஒட்டுமொத்த நாடும் கடுமையான தட்டுப்பாட்டால் நிலைகுலைந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், அதிபர் ரோட்ரிகோ பாஸ். அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்தார்.
இந்த அவசரநிலை சட்டம், சாலை மறியல்களை அகற்றி நாட்டின் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிபர் எச்சரித்துள்ளார். இதனால் பொலிவியா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.