

காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி அதிகாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் மேற்கே காபூல் நகரில் கிசாக் என்ற பகுதியில் ஈராக்கிய காவல் பணி ஆள் தேர்வு மையத்தில் கார் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் குடிமக்களில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதேபோன்று, காபூல் நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.