அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் சாவு - போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை

அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் பலியான சம்பவத்தில், போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் சாவு - போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.

அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான். இதில் அவனது அருகில் இருந்த சாத் கார்லெஸ் (17) என்கிற சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து.

இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், அங்கிருந்து எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் சாத் கார்லெஸ் பரிதாபமாக இறந்துவிட்டான்.

அதே சமயம் போலீஸ் வருவதை கண்டு டெவின் ஹோட்ஜ் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடினான். எனினும் எப்படியும் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என பயந்த டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com