ஏமனில் ஆஸ்பத்திரி மீது குண்டு வீச்சு; 7 பேர் பலி

ஏமனில் ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 7 பேர் பலியாயினர்.
ஏமனில் ஆஸ்பத்திரி மீது குண்டு வீச்சு; 7 பேர் பலி
Published on

சனா,

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் ஆதரவு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாடா நகரில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அப்போது அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் இதில் சிக்கினர்.

மருத்துவ ஊழியர் ஒருவர் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com