உக்ரைன் ராணுவ வீரர்களுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போரிஸ் ஜான்சன்

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் குண்டு எறிதல் உள்ளிட்ட ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டார்.
உக்ரைன் ராணுவ வீரர்களுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போரிஸ் ஜான்சன்
Published on

லண்டன்,

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள நிலையில், அவ்வாறு புதிதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 10 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக உக்ரைனில் இருந்து வீரர்களின் குழு ஒன்று இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அவசரகால போர் நுணுக்கங்கள், போர்க்களத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் போரிஸ் ஜான்சன் உக்ரைன் ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெறும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த பயிற்சியில் போரிஸ் ஜான்சன், நவீன ஆயுதங்களை கையாளுதல், குண்டுகளை ஏறிவது போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com