

லண்டன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை.
ஏற்கனவே இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
கொரோனா பதிப்பு இருப்பது உறுட்தி செய்தபின், நாட்டை வீட்டிலிருந்து தொடர்ந்து வழிநடத்துவேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்
"நான் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளை எனக்கு உள்ளது. அது ஒரு வெப்பநிலை மற்றும் தொடர்ச்சியான இருமல்" என்று ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தூள்ளார்.
"தலைமை மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில், நான் ஒரு சோதனை எடுத்துள்ளேன், அது நேர்மறையாக வெளிவந்துள்ளது.
"நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், என்னை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டேன். அது முற்றிலும் சரியானது.
"தொழில்நுட்பத்திற்கு நன்றி, எனது உயர்மட்ட குழுவுடன் தொடர்புகொண்டு வைரஸுக்கு எதிரான தேசிய போருக்கு வழி நடத்துவேன் என கூறி உள்ளார்.