

லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். குணமடைந்த பிறகு, ஒரு வாரத்துக்கு முன்பு வீடு திரும்பினார். தனது ஓய்வில்லத்தில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில், அவர் அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கியுள்ளார். தனது மந்திரிசபை சகாக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடங்கினார்.
மேலும், அவரை வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.