இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு
Published on

லண்டன்,

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.

இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிப்பதாக இருந்தன .

போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்பட்டது

இன்று வாக்குகள் எண்ணப்பட்டது அதில் போரிஸ் ஜான்சன் அதிக வாக்குகள் பெற்று புதிய பிரதமராக தேர்வு ஆனார். போரிஸ் 66 சதவீத ஓட்டுகளும், ஹண்ட் 34 சதவீத ஓட்டுகளும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com