பிரபல மல்யுத்த வீரர் பிரே வெயட் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த வீரர் பிரே வெயட் மரணமடைந்தார்.
பிரபல மல்யுத்த வீரர் பிரே வெயட் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

வாஷிங்டன்,

டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் பிரே வெயட். இவரது உண்மையான பெயர் விண்ட்ஹம் ரொடுண்டா. 'தி வெயட் பேமிலி' குழுவின் தலைவராக பிரே வெயட் செயல்பட்டு வந்தார். பிரே வெயட் 3 முறை டபுள்யூ டபுள்யூ இ உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதனிடையே, 36 வயதான பிரே வெயட் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மல்யுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரே வெயட் அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார்.

இந்நிலையில், பிரே வெயட் இன்று உயிரிழந்தார். பிரே வெயட் உயிரிழப்பு தொடர்பான அறிவிப்பை டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த விளையாட்டு குழு தலைவர் டிரிபுள் ஹெச் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரே வெயட்டின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படாத நிலையில் அவர் திடீரென உயிரிழந்துவிட்டதாக வெயட்டின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டபுள்யூ டபுள்யூ இ நட்சத்திரம் பிரே வெயட் மறைவு மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com