பிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

பிரேசில் நாட்டில் சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
பிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
Published on

சாவோ பவுலோ,

பிரேசில் நாட்டின் சாவோ பவுலோ நகர் அருகே காம்பினாஸ் என்ற பகுதியில் கத்தோலிக்க சர்ச் ஒன்று உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் இறை வணக்கத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி 20 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். போலீசார் வருவதற்குள் தன்னை துப்பாக்கியால் சுட்டு கொண்டு அந்த நபரும் தற்கொல செய்து கொண்டார்.

49 வயது நிறைந்த அவர் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றிய விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.

கடந்த வாரம் சியாராவில் மிலாகிரெஸ் நகரில் 2 வங்கிகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் போலீசாருக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 கொள்ளையர்கள், ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com