

பிரேசிலியா,
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, குடல் அடைப்பு காரணமாக இன்று அதிகாலை சிகிச்சைக்காக சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு நபர் போல்சனரோவை கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார். அதன்பிறகு 4 முறை வயிற்று அறுவை சிகிச்சைக்கு போல்சனரோ உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு போல்சனரோவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அன்டோனியோ லூயிஸ் மாசிடோ தற்போது அதிபர் போல்சனரோவுக்கு வயிற்றில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் போல்சனரோவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ அதிபர் மக்கள் தொடர்பு சேவையோ இதுவரை எந்த பதிலும தெரிவிக்கவில்லை.
66 வயதாகும் போல்சனரோ கடந்த வருடம் ஜூலை மாதம், குடல் அடைப்பு நோயின் காரணமாக 4 நாட்கள் சிகிச்சை பெற்றார். மேலும் கடந்த வருடம் கொரோனாவில் இருந்து குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.