பிரேசிலில் 4½ லட்சத்தை கடந்தது கொரோனா பலி

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று.
பிரேசிலில் 4½ லட்சத்தை கடந்தது கொரோனா பலி
Published on

உலக அளவில் அந்த நாடு கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் அதே வேளையில், வைரஸ் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குறிப்பாக அங்கு நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து வருகின்றனர். இந்தநிலையில் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,173 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,52,031 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் அங்கு 73,453 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,94,678 ஆக உயர்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com