பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு

இது குறித்து விரிவான விளக்கமளிக்கப் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு மெட்டாவுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு
Published on: 

பிரேசிலியா,

பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக அதிபர் லுலா அதிரடிக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார். வரும் 25-ந்தேதி அதிபர் தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தலில் 47.03 சதவீதம் வாக்குகள் பெற்ற வலதுசாரி வேட்பாளர் பிளாவியோ போல்சோனாரோவுக்கு ஆதரவாக மெட்டா நிறுவனம் செயல்படுவதாக ' லுலா பிரசாரக் குழு கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தங்களது விளம்பரங்கள் மற்றும் பிரசார வீடியோக்களை பொதுமக்களை சென்றடையவிடாமல் தொழில்நுட்பம் (அல்காரிதம்) மூலம் மெட்டா முடக்கியதாகக் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.

இதுகுறித்து 48 மணி நேரத்திற்குள் விரிவான விளக்கமளிக்கப் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு மெட்டாவுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இதனால் தேர்தல் களம் சூடேறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com