பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி


பிரிக்ஸ் அமைப்பு  சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது:  பிரதமர் மோடி
x

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது 5 நாடுகளின் சுற்றுப்பயணத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கினார். அவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா மற்றும் கரீபியன் தீவு நாடான டிரினிடாட- டொபாகோ ஆகியவற்றுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார்.பின்னர் பிரதமர் மோடி நேற்று தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்கு சென்றடைந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அர்ஜென்டினா பயணத்தை முடித்துக்கொண்டு தனது சுற்றுப்பயணத்தில் 4-வது நாடாக பிரேசிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் 17-வது பிரிக்ஸ் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ப தற்காக புறப்பட்டார். பிரேசிலின் ரியோ டி ஜெனி ரோவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பிரேசில் அரசு சார்பில் சம்பிரதாய வர வேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் லுலா ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிரிக்ஸ் மாநாடு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலை தள பதிவில் கூறி உள்ளதாவது; உலக நாடுகளின் நன்மைக்காக பிரிக்ஸ் அமைப்பு ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ரியோ டி ஜெனிரோவில் நடத்தியதற்காக அதிபர் லுலாவுக்கு நன்றி. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story