அமெரிக்காவில் பற்றி எரியும் தீயுடன் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

திரைப்படங்களில் கதாநாயகர்கள் உடலில் தீப்பற்றி எரிகிறபோதும் கெத்ததாக நடந்து வருவதை போல மணமக்கள் இருவரும் தங்கள் உடலின் பின்புறம் தீ வைத்துக்கொண்டு, நெருப்புடன் ஸ்டைலாக நடந்து வந்து விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அமெரிக்காவில் பற்றி எரியும் தீயுடன் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
Published on

திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான அத்தியாயம். வாழ்வில் ஒரு முறை மட்டும் நிகழும் இந்த அழகிய நிகழ்வை தங்களும் சரி, தங்களின் திருமணத்துக்கும் வருபவர்களும் சரி என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மணமக்களின் கனவு.

அதனால்தான் இப்போதெல்லாம் வானில் பறந்தபடி திருமணம், கடலுக்கு அடியில் திருமணம் என பலபல விதங்களில் திருமணத்தை நடத்தி ஆச்சிரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஒருசேர அளிக்கும் வகையில் வினோதமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த கேபே ஜெசோப் மற்றும் ஆம்பியர் பம்பைர் ஆகிய இருவரும் ஹாலிவுட் திரைப்படங்களில் சண்டை கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர். படங்களில் இணைந்து பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்த காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடந்தது. சண்டை கலைஞர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் திருமணம் எப்படி இருக்கும் என்பதை அனைவருக்கும் காட்டும் விதமாக தங்களின் திருமணத்தை நடத்தினர்.

திரைப்படங்களில் கதாநாயகர்கள் உடலில் தீப்பற்றி எரிகிறபோதும் கெத்ததாக நடந்து வருவதை போல மணமக்கள் இருவரும் தங்கள் உடலின் பின்புறம் தீ வைத்துக்கொண்டு, நெருப்புடன் ஸ்டைலாக நடந்து வந்து விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் தம்பதியின் இந்த வினோத செயலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் இதை முட்டாள்தனமான செயல் மற்றும் தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com