போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வாடிகன்,
போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பால் உடல்நலம் மோசமடைந்தது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டு வந்தார். சுவாச தொற்று மற்றும் நுரையீரலை நிம்மோனியா பாதிப்பில் இருந்து குணமடைந்து சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வாடிகனுக்கு திரும்பினார்.
இந்தநிலையில், போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இத்தாலிக்கு வந்தபோது வாடிகனில் போப் பிரான்சிஸ்சை சந்தித்ததாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போது சார்லஸ்- கமிலாவின் திருமண ஆண்டு விழாவிற்கு தனது வாழ்த்துகளை போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






