தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை..!

இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்கிற பெருமையும் இவரை சேரும்.
தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை..!
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஹர்பிரீத் சிங். 32 வயதான இவர் தனி ஒருவராக தென்துருவத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்கிற பெருமையும் இவரை சேரும்.

மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து 40 நாட்களாக 1,127 கி.மீ. பயணம் செய்து அவர் தென்துருவத்தை அடைந்தார்.

சவால் மிகுந்த இந்த பயணத்தின் அனுபவங்களை தொடர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்த ஹர்பிரீத் சிங், தென்துருவத்தை அடைந்த சாதனை நிகழ்வை நேரலையில் வீடியோவாக ஒளிபரப்பினார்.

அதன் பின்னர் இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் பனிப்பொழிவு இருக்கும் தென்துருவத்துக்கு சென்றேன். இப்போது பல உணர்வுகளை உணர்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு துருவ உலகத்தைபற்றி எனக்கு எதுவும் தெரியாது, இறுதியாக இங்கே இருப்பதை யதார்த்தமாக உணர்கிறேன். இங்கு வருவது கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com