இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலை: 15 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு

இங்கிலாந்தில் 7 வயது சிறுமியை கொன்றதற்காக 15 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலை: 15 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப். பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.

கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதனை அடுத்து அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவர் குற்றத்திற்குரிய ஆயுதம் ஒன்றினை வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், யார்க் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர் செய்யப்படுகிறார்.

கடந்த திங்கட்கிழமை யார்க் நகரின் உட்தோர்ப் பகுதியில் கூட்டம் ஒன்றிற்கு அதிகாரிகள் கலந்து கொள்ள சென்றனர். உயிருக்கு அச்சுறுத்தலான காயங்களுடன் அருகிலுள்ள பகுதி ஒன்றில் கேட்டீ கிடந்துள்ளதை அவர்கள் கண்டுள்ளனர்.

இதனை அடுத்து கேட்டீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு கேட்டீ உயிரிழந்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com