ஹாலிவுட் நடிகை பிரிட்னி ஸ்பியர்சை அழ வைத்த ஆவணப்படம்

பாடகி, பாடலாசிரியை, நடனமங்கை, நடிகை என பல முகங்களை ஒருங்கே பெற்றவர், ஹாலிவுட் பிரபலம் பிரிட்னி ஸ்பியர்ஸ். 39 வயதானாலும் இன்னும் இளமைத்துள்ளலோடு காட்சி தருகிற அவருக்கு அமெரிக்காவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
பிரிட்னி ஸ்பியர்ஸ்
பிரிட்னி ஸ்பியர்ஸ்
Published on

இவரது வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை எடுத்துள்ளது. இந்தப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வாழ்வின் மையப்பகுதியில் சந்தித்த போராட்டங்கள், தந்தை ஜேமி ஸ்பியர்சின் கட்டுப்படுத்தப்பட்ட பழமைவாத வழிநடத்தலால் சந்தித்த அவஸ்தைகள், புகழ் வெளிச்சத்துக்கு அவர் வந்த கதை எல்லாம் நேர்த்தியாக சித்தரிக்கப் பட்டுள்ளது.இந்தப்படத்தின் பிரத்யேக காட்சியை பிரிட்னி ஸ்பியர்ஸ் பார்த்தார். பிரத்யேக காட்சியை பிரிட்னி ஸ்பியர்ஸ் பார்த்து 2 மாதங்கள் ஆன பின்னாலும் அதில் இருந்து அவர் மீள முடியாமல் இருக்கிறார். படக்காட்சியை முழுமையாக பார்க்கக்கூட இயலவில்லை என்று அவர் உருக்கமாக கூறி உள்ளார்.

இந்தப் படத்தை பார்த்த அனுபவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருப்பதாவது:-

என் வாழ்க்கை எப்போதும் மிகவும் ஊகமானது. எல்லோராலும் கவனிக்கப் பட்டது. எனது முழு வாழ்க்கையும் இப்படித்தான் என்று தீர்மானிக்கப்பட்டது. என்னைப் பற்றிய ஆவணப்படத்தையே நான் முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால் நான் அதைப் பார்த்ததில் இருந்து, அவர்கள் என் மீது காட்டிய வெளிச்சத்தால் நான் வெட்கப்பட்டேன். நான் இரண்டு வாரங்கள் அழுதேன். நான் இன்னும் சில நேரங்களில் அழுகிறேன். நான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க, சொந்த ஆன்மிகத்தில் என்னால் முடிந்ததை செய்கிறேன். நான் இங்கே பூரணமாக இருக்கவில்லை. நான் இங்கே கரிசனத்தை மற்றவர்களிடம் கடத்திச்செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அவர் உருகி உள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com