அமெரிக்க பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்சிடம் விசாரணை; பணியாளரை தாக்கினாரா?

சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்க பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39). இவர் தனது பணியாளருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவரை தாக்கியதாகவும், அவரது செல்போனை தட்டி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
அமெரிக்க பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்சிடம் விசாரணை; பணியாளரை தாக்கினாரா?
Published on

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வென்ஜூரா கண்ட்ரி ஷெரீப் அலுவலகம், பிரிட்னி ஸ்பியர்சிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரிட்னி ஸ்பியர்சின் வக்கீல் மேத்யூ ரோசன்கார்ட் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், யார் வேண்டுமானாலும் ஒரு குற்றச்சாட்டைக் கூறலாம். ஆனால் இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த குற்றச்சாட்டு திரிக்கப்பட்டதேயன்றி வேறொன்றும் இல்லை. இது மிகச்சிறிய சம்பவம்தான் என்று ஷெரீப் அலுவலகம் கூறி உள்ளது. புகார் செய்துள்ள நபருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் உறுதி செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரிட்னி ஸ்பியர்சிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com