புரூணை நாட்டு இளவரசர் உடல்நல குறைவால் மரணம்

புரூணை நாட்டு இளவரசர் அஜிம் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
புரூணை நாட்டு இளவரசர் உடல்நல குறைவால் மரணம்
Published on

பந்தர் செரி பேகாவன்,

புரூணை நாட்டு சுல்தானின் வாரிசு மற்றும் அரியணை ஏற 4வது இடத்திற்கான வரிசையில் இருந்தவர் இளவரசர் அஜிம் (வயது 38).

இவர் கடந்த சில காலங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். எனினும் உடல்நலம் மோசமடைந்து தலைநகர் பந்தர் செரி பேகாவனில் அவர் மரணம் அடைந்து உள்ளார்.

இதனை அந்நாட்டு அரசு, தேசிய வானொலியில் அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். அதற்கேற்ற வகையில் மக்கள் உடைகளை உடுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இளவரசர் அஜிம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை அடிப்படையாக கொண்ட டேரைல் பிரின்ஸ் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அஜிம் பொல்கையா என்ற பெயரில் யூ ஆர் நாட் யூ மற்றும் தி ஹேப்பி பிரின்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை அவர் தயாரித்து உள்ளார். இந்நிலையில் குறைந்த வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் காலமானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com