

மானாகுவா,
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் உள்ள ஜினோடேகா மாகாணத்தில் போசாவஸ் மழைக்காடு உள்ளது. அமேசான் மழைக்காட்டுக்கு பிறகு உலகிலேயே 2-வது நீளமான மழைக்காடாக இது விளங்குகிறது.
இந்த காட்டின் மைய பகுதியில் மாயாக்னா என்று அழைக் கும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க புதிய குடியேறிகள் முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் மாயாக்னா இன மக்கள் வசிக்கும் பகுதிக் குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் மாயாக்னா இனத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 10 பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றது. இது குறித்து பேசிய அந்த இனத்தின் மூத்த தலைவர் ஒருவர், பழங்குடியினர் அல்லாத புதிய குடியேறிகளே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.