புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி

தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி
Published on

பங்காக்

தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார்.

இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

உடனே தீரென்ராம் தன் காரிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்து வலம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார் தீரென்ராம் பின்னர் லம்பாய் வீட்டுக்குச் சென்ற தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர். தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் புத்த துறவியாகும் முன் லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில் சொன்னால் புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்.

லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com