நேபாளத்தில் பஸ் விபத்து; 13 பேர் பலி

பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மலையில் இருந்து, 150 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
நேபாளத்தில் பஸ் விபத்து; 13 பேர் பலி
Published on

காத்மண்டு,

நேபாள நாட்டின் சுதூர்பச்சிம் மாகாணத்தில் பைதடி நகரில் பஸ் ஒன்று மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பைதடி நகரின் பாவ்னி கிராமத்தில் இருந்து, பாஜங் நகரின் சன்குடா கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக சிலர் சென்றனர்.

இந்நிலையில், அந்த பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மலையில் இருந்து, 150 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்தில் 6 பேர் பலியானார்கள். 8 பேர் சிகிச்சையின்போது உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், சிக்கி மொத்தம் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Also Read
6-வது முறையாக இளையோர் உலக கோப்பை வெற்றி குறிப்பிடத்தக்க சாதனை: பி.சி.சி.ஐ. தலைவர் பெருமிதம்
நேபாளத்தில் பஸ் விபத்து; 13 பேர் பலி

இதுதவிர பஸ்சில் பயணித்தவர்களில் 34 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் கவலைக்குரிய வகையில் உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

பஸ் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிக அளவில் ஆட்களை ஏற்றியது விபத்திற்கு காரணம் என்றும் அதனால் பஸ் மேலே ஏற முடியாமல் போனது எனவும் முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com