இந்தோனேசியாவில் பேருந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நடந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தோனேசியாவில் பேருந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியா நாட்டின் யோக்யகர்த்தா மாகாணத்தில் பந்துல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென இன்று சாலை விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்பு படையின் செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்துள்ளார். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com