300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 44 பேர் பலி

பெரு நாட்டில் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்ததில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 44 பேர் பலி
Published on

பெருநாட்டில் பயணிகள் பஸ் ஒன்று ஒகோனா பகுதியில் அமைந்துள்ள மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. பேருந்து நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் திரும்பும் போது நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கு ஆறு ஓடுவதால் அதில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. இதில் 44 பேர் பலியானார்கள்.

இதனிடையே மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்டு மருத்துவமனை சேர்க்கும் பணி கடுமையாக உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ள போதும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com