

காத்மாண்டு
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் பலியாகினர். ராஜ்பிராஜ் என்ற இடத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு 50 பேருடன் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, வளைவு ஒன்றில் திரும்புகையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் பலியாகினர். 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல பயணிகள் ஆற்றில் மூழ்கியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்களும் மீட்பு குழுவினரும் தீவிரமாக மீட்கப்பட்டுள்ளனர்.