ரஷ்யாவில் பேருந்து நிறுத்தத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

ரஷ்யாவில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
ரஷ்யாவில் பேருந்து நிறுத்தத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
Published on

மாஸ்கோ,

ரஷ்யாவின் நில்னி நோவ்கரோடு பகுதியில் போல்ஷியே ஒர்லி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிலர் பேருந்துக்காக காத்திருந்து உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதன்பின்னர் அந்த நபர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என மண்டல அவசரகால சேவை செய்தி தொடர்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com