இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்தது: 8 பேர் சாவு

இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்தது: 8 பேர் சாவு
Published on

ஜகார்தா,

இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் டாங்குபன் பெராகு எரிமலை அமைந்துள்ளது. அதைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு நேற்று முன்தினம் 58 சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

சுபாங் மாவட்டத்தில் உள்ள பலாசாரி சாலையில் வளைவான பகுதியில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழைய பஸ்களை, மோசமான சாலைகளில் இயக்குகிறபோது அவை விபத்துக்குள்ளாவது அங்கு வாடிக்கையாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com