ஆளில்லா விமானம் மூலம் வீட்டுக்கு வரும் பொருட்கள்

ஆளில்லா விமானம் மூலம் வீட்டுக்கே பொருட்களை ‘டெலிவரி’ செய்யும் முறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல அமேசான் நிறுவனம் இந்தச் சேவையை வழங்கப்போகிறது.
ஆளில்லா விமானம் மூலம் வீட்டுக்கு வரும் பொருட்கள்
Published on

அமெரிக்கா லாஸ் வேகாசில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில், தமது சமீபத்திய புதிய முயற்சியாக இது அமையும் எனத் தெரிவித்தது, அந்நிறுவனம்.

இந்த ஆளில்லா விமானங்களால் 2.3 கிலோ எடை வரை உள்ள பொருட்களை 15 மைல் தூரம் வரை தூக்கிச் செல்ல முடியும் என நிறுவனத்தின் நிர்வாகி ஜெப் வில்கே கூறினார்.

சில மாதங்களில் இச்சேவை தொடங்கும் என்ற அவர், உலகில் முதலில் எங்கு, எப்போது இது நடைமுறைபடுத்தப்படும் எனக் கூறவில்லை.

இதை அமெரிக்காவில் செயல்படுத்த அமேசான் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெடரல் ஏவியேஷன் நிர்வாகம், அமேசான் பிரைம் ஏர்-க்கு எம்கே27 விமானத்தை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இயக்க சிறப்பு பறக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அமேசான் பிரைம் ஏர் இந்த விமானத்தை பொருட்களை டெலிவரி செய்வதற்குப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது. இந்தச் சான்றிதழ் ஓராண்டு வரை நீடிக்கும். மேலும் தேவையென்றால் இதை நீட்டிக்கவும் செய்யலாம்.

வெறும் விளம்பரத்துக்காக ஆளில்லா விமானத்தில் டெலிவரி என அமேசான் பொய்யாகக் கூறி வருவதாக வெகுநாட்களாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் 2016-ம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்காவில் அமேசான் இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியது. அப்போது ஆளில்லா விமானம் பொருளை 13 நிமிடங்களில் டெலிவரி செய்தது.

ரீ மார்ஸ் எனப்படும் மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் விண்வெளி சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் இந்த ஆளில்லா விமானம் அமேசான் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டது.

பொருட்கள் தவறுவதைக் குறைக்க இந்த விமானங்கள் தயார்செய்யப்பட்டுள்ளன என அமேசான் கூறியுள்ளது.

இதில் சில ஆளில்லா விமானங்கள் தன்னிச்சையாகச் செயல்படும். ஆனால் சிலவற்றுக்கு எதிர்பாராத சூழ்நிலைகளை சந்திக்கத் தெரியாது. அவை, தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கும் என வில்கே கூறினார்.

இந்நிறுவனம் இந்த ஆளில்லா விமானத்தைச் செயல்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அது இசையுடன் இருப்பதால், ஒலியை ஏற்படுத்துமா, சமூகத்தால் அங்கீகரிக்கப்படுமா என்பது போன்ற சந்தேகங்களை சிலர் எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com