கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்

காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர்.

அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்கப்பட்ட 6 பேரில், 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை நிவாடா கவுன்டியின் செய்தி தொடர்பாளர் ஆஷ்லே குவாத்ரோஸ் தெரிவித்து உள்ளார்.

Also Read
தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்
கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்

எனினும், காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கமும் அந்த பகுதியில் காணப்படுகிறது.

இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல மணிநேர போராட்டத்திற்கு பின்னரே 6 பேர் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com