போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு

அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை போலந்து எதிர்பார்த்து காத்திருந்தது.
போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு
Published on

வார்சா,

ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாடு, அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்த சூழ்நிலையில், போலந்தில் நிரந்தர அமெரிக்க ராணுவ தளத்தை அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து போலந்து பாதுகாப்புத்துறை துணை மந்திரி செசாரி டாம்சிக் கூறுகையில், "போலந்தின் இந்த சலுகைக்கு அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. கூட்டு திட்டமான இதற்கான செலவுகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்.

தற்போது போலந்தில் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் சுழற்சி முறையில் உள்ள நிலையில், அவர்களை நிரந்தரமாக தங்க வைக்க போலந்து விரும்புகிறது. எனினும், இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளிலேயே உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com