ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
Published on

ஜெருசலேம்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்திற்கு மேல் நடந்துவரும் இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக பயங்கரவாத ஈரான் சர்வாதிகார அரசை நாம் நசுக்கியுள்ளோம். தாக்குதல் இன்னும் முடியவில்லை. ஈரான் அரசு நிலைகுலைந்துள்ளது. விரைவில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com