தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

கனடாவில் நடப்பு மாத துவக்கத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்
Published on

ஒட்டாவா

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயணக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வரும் செப்டம்பர் முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அமெரிக்கர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடுகளில் கனடாவில்தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட தகுதியான வயது வந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டு உள்ளதாகவும் மாகாண தலைவர்களுடன் நடந்த ஆலோசனையின் போது ட்ரூடோ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com