

ஒட்டோவா,
கனடாவில் விமான பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் தமிழக மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். அதேபோல், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம். இவர்கள் இருவரும் கனடாவில் கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் இருவரும் நேற்று முன் தினம் கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கனடாவின் ரிகினா நகரில் இருந்து மனிடோபா நகருக்கு சிறிய ரக விமானத்தை ஓட்டி பயிற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாணவர்கள் சிவக்குமார், திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.