ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டு இருந்த கவுரவ குடியுரிமையை பறித்தது கனடா

ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டு இருந்த கவுரவ குடியுரிமையை கனடா ரத்து செய்துள்ளது.
ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டு இருந்த கவுரவ குடியுரிமையை பறித்தது கனடா
Published on

ஒட்டவா,

மியன்மார் அரசாங்க ஆலோசகரும் அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளருமான ஆங் சாங் சூகிக்கு கனடா அரசு கவுரவ குடியுரிமை வழங்கியது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆங் சாங் சூகிக்கு இந்த கவுரவம் கிடைத்தது. இந்த நிலையில், ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான ராணுவத்தின் அடக்குமுறையை தடுக்க தவறியதாக ஆங் சாங் சூகி மீது புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையால் சர்வதேச அளவில், ஆங் சாங் சூகியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது.

இந்த சூழலில், ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமையை ரத்து செய்ய கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமை ரத்தாகிறது.

திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லமா, பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் மலாலா யூசுப்சாய், மற்றும் நெல்சன் மண்டேலா உள்பட 5 பேருக்கு மட்டும் கனடா கவுரவ குடியுரிமை வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com