உலகின் பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது

ஒரு டென்னிஸ் பந்து அளவிற்கு பெரிதான ஆனால் வெட்டப்படாத முழுமையான, உலகின் பெரிய வைரம் 53 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது.
உலகின் பெரிய வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது
Published on

வான்கூவர்

கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது.

இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுத்தனர். இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் நமது ஒளி என்று பெயரிட்டிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com