ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு கனடா பிரதமர் தடை

ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்து உள்ளார்.
ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு கனடா பிரதமர் தடை
Published on

ஒட்டவா

கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உறவுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவுடனான உறவை குறைத்து கொள்ள கனடா, ஹாங்காங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியது

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி, மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாகக் கூறிச் சீன அரசு கைது செய்தது. இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், மெங் வான்சூவை விடுவிக்க வேண்டும் எனச் சீன அரசு கெடுபிடி செய்தது.

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தத் திட்டத்தை ஏற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துவிட்டார். இதையடுத்துக் குற்றவாளிகளை நாடு கடத்த ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார். இதேபோல் ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துவிட்டார். கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தைக் கனடா பிரதமர் நிராகரித்தது சீனாவின் பணயக் கைதி ராஜதந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நடமுறை "உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் கனடா ஹாங்காங்கிற்கு முக்கியமான இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது" என்று கூறினார். ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து முக்கிய பொருட்களும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கானவை என்றும் கனடா கருதுகிறது. கனடா வெளியுறவு மந்திரி புதிய சட்டத்தை சுதந்திரத்திற்கான "ஒரு குறிப்பிடத்தக்க படி" என்று குறிப்பிட்டார்.

ஒருமுறை விட்டுக்கொடுத்துவிட்டால் சீனா அடுத்த இலக்கைக் குறிவைக்கும் என்பதை அறிந்து கனடா பிரதமர் இவ்வாறு தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com