அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கம் - கனடா அரசு அதிரடி

அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஓட்டாவா,

இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, "டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது" என்றும் தெரிவித்துள்ளது.

கனடா அரசு செயலகத்தின் கருவூல வாரியத்தின் அறிக்கையின்படி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். மேலும் பயன்பாட்டின் தற்போதைய நிறுவல்கள் அகற்றப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com