"பதவியை விட்டு வெளியேற முடியாது" - அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்

தோல்வி அடைந்த அதிபராக பதவியை விட்டு வெளியேற முடியாது என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"பதவியை விட்டு வெளியேற முடியாது" - அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

இந்த நிலையில், தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என கூறிய அதிபர் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com