நியூயார்க்கில் கார் விபத்து: 20 பேர் பலி

நியூயார்க்கில் கார் விபத்து ஒன்றில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் கார் விபத்து: 20 பேர் பலி
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஷோஹாரி நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுலா வாகனத்தினால் இந்த கோர விபத்து நிகழ்ந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில சாலை வழி 30 மற்றும் மாநில சாலை வழி 30ஏ ஆகியவை சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் தற்போது 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவி தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com