நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
ஆம்ஸ்டர்டாம்,
கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது.
இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, சாலையில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா?, பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து போலீசார் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை






