

டெஹ்ரான்,
ஈரானில் போயிங் 707 ரக ராணுவ சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து புறப்பட்டு தெஹ்ரான் நகரருகே தரையிறங்க முற்பட்டது. அந்த விமானம் ஓடுதளத்தில் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் தீப்பிடித்து கொண்டது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 13 அதிகாரிகள் பலியாகி உள்ளனர். விமானத்தின் தரை இறங்க பயன்படும் கியர் மற்றும் ஜெட் என்ஜின் ஒன்றும் அருகருகே சிதறி கிடந்தன. விமானத்தின் மூக்கு பகுதி சுவர் ஒன்றின் மீது மோதி இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 16 பேரில் விமான பொறியாளர் தவிர அனைவரும் பலியாகி விட்டனர் என செய்தி நிறுவனம் ஒன்றில் முன்பு தகவல் வெளியானது. விமான கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்தபின் அதிக தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.