உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
உக்ரைனில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
Published on

கீவ்,

ஸ்பெயின் நாட்டில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஆன்டோனோவ் 12 ரக சரக்கு விமானம் உக்ரைனின் லிவிவ் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

இந்த விமானம் லிவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தை நெருங்கியபோது, திடீரென விமானத்தின் எரிபொருள் காலியானது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து 1 கி.மீ.க்கு முன் உள்ள காட்டு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com