இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எழுப்பிய செல்போன்கள்

நாடு முழுவதும் உள்ள செல்போன்களில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியது
இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எழுப்பிய செல்போன்கள்
Published on

லண்டன்,

தேசிய அவசர நிலை நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி இங்கிலாந்தில் முதன்முறையாக 2023-ம் ஆண்டு நடைபெற்றது.நாடு தழுவிய இந்த பயிற்சியின் இரண்டாவது சோதனை முயற்சி தற்போது நடந்து வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள செல்போன்களில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியது. அப்போது சுமார் 10 நொடிகள் செல்போனில் அதிர்வு ஏற்பட்டது. முடிவில் இது ஒரு சோதனை முயற்சி என்ற குறுஞ்செய்தியும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இது உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com