முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
Published on

நியூயார்க்,

தொழில் முதலீடுகளை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமெரிக்கா சென்றார். நியூயார்க் விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் தொழில் முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி, தமிழகதத்தில் தொழில் துவங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமாரும், ராஜேந்திரபாலாஜியும் இணைந்து கொள்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com