38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயம்

17 சிப்பந்திகள் 21 பயணிகள் என மொத்தம் 38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயமானது.
38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயம்
Published on

சாண்டிகோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற ராணுவ விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச்சேர்ந்த அந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் புறப்பட்டுச்சென்றதாகவும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர். மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com