

பெய்ஜிங்,
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங், ஒரு முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாகும். சீனாவில் விற்கப்படும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதத்தைமும், ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதத்தைமும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமான காணப்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த விபத்தால் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, விபத்து நடந்த பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.