சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுகிறது - வியட்நாம் குற்றச்சாட்டு

டிரைடன் தீவில் சீனா விமான ஓடுபாதையை கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது.
Image Courtesy : Reuters 
Image Courtesy : Reuters 
Published on

பீஜிங்,

தென் சீனக்கடலின் முழு பகுதியையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுகிறது. அந்தவகையில் 1974-ம் ஆண்டு வியட்நாமின் பாராசெல்ஸ் தீவை சீனா கைப்பற்றியது. ஆனால் அங்குள்ள டிரைடன் தீவுக்கு வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. எனினும் அந்த பகுதியில் ஹெலிபேட் மற்றும் ரேடாருடன் சிறிய துறைமுகத்தையும் சீனா பல ஆண்டுகளாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த தீவில் விமான ஓடுபாதையை சீனா கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது. இதன்மூலம் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுவதாக வியட்நாம் குற்றம்சாட்டியது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விரும்பியபடி செய்ய உரிமை உள்ளதாக கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com